கொரோனா தொற்றால் 15 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு!
திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 15 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
வயிற்றில் ஏற்பட்ட அசௌகரியம் காரணமாக நேற்று (22) நண்பகல் 12 மணியளவில் சிறுமி பலபிட்டிய ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பல மணி நேரம் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
இதனையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட என்டிஜன் பரிசோதனையில், கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரது இறுதி சடங்குகள் பரகஹதொட மயானத்தில் சுகாதார வழிகாட்டுதல்களின் படி இடம்பெற்றுள்ளது