யாழில் 15 வயது சிறுமி குழந்தை பிரசவிப்பு – தந்தைக்கு 18 வயதாம்

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் குழந்தை பிரசவித்த சம்பவம் பதிவாகியுள்ளது.
பாடசாலையில் இருந்து இடைவிலகிய மாணவர்கள் குறித்து பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஆராய்ந்தபோது குறித்த விடயம் தெரியவந்துள்ளது.
இதன்போதே குறித்த சிறுமி, பிறந்து 12 நாட்களே ஆகிய சிசுவோடு அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அத்தோடு குறித்த சிறுமியுடன் 18 வயதான இளைஞன் ஒருவர் குடும்பம் நடத்துவதும் தெரியவந்துள்ளது. இச் சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



