200 குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீர் பெற்றுக்கொடுக்கும் கம்மெத்த
(LBC Tamil) பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழும் மக்களுக்கு கம்மெத்த உதவிக்கரம் நீட்டிவருகின்றது.
குருணாகல் கொபெய்கனே ஹொங்கமுவ கிராமத்திலுள்ள 200 குடும்பங்களுக்கான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை கம்மெத்த நாளை ஆரம்பிக்கவுள்ளது.
குருணாகல் கொபெய்கனே ஹொங்கமுவ கிராமத்தில் 200 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வாழ்கின்றனர்.
இவர்கள் இதுவரையில் உவர் தன்மையுடைய நீரையே பருகி வந்துள்ளனர்.
ஹொங்கமுவ மகா வித்தியாலத்தை சேர்ந்த 400 மாணவர்களும் அதில் அடங்குகின்றனர்.
சுத்தமான குடிநீர் இன்மையால் இந்த கிராமத்தில் சிறுநீரக நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
மாவத்தகம, குருகோட, கதத்தாவ உள்ளிட்ட அனைத்து கிராமங்களையும் சேர்ந்த மக்கள் சுத்தமான குடிநீருக்காகவே காத்திருக்கின்றனர்.
சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கமைய இலங்கை கடற்படையின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் கலாநிதி எம்.யு.ஏ. தென்னகோன் மற்றும் தேவிங்கா புஸ்வெல்ல ஆகியோரின் நன்கொடையில் இந்த கிராமத்திற்கு நீர் சுத்திகரிப்பு திட்டம் வழங்கி வைக்கப்படுகின்றது.
மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் பொருட்டு இந்த திட்டத்தின் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன.