200 விசேட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்
பொருளாதார நெருக்கடியால் 200 விசேட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறி உள்ளார்கள்.
எனவே மிகுதியாக இருக்கும் வைத்தியர்களையாவது தக்க வைத்துக் கொள்ள அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டுமென முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் இன்று வெள்ளிக்கிழமை உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொருளாதார பாதிப்பு மருத்துவ சேவைத்துறையில் தாக்கம் செலுத்தியுள்ளது. வைத்தியர்கள் சேவையில் இருந்து ஓய்வுபெறும் வயதெல்லையை மறுபரிசீலனை செய்யுமாறு சுகாதாரத்துறை செயற்குழு கூட்டத்தின் போது பலதடவை வலியுறுத்தியுள்ளேன்.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டில் இருந்து சுமார் 200 விசேட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறி உள்ளார்கள்.
பெரும்பாலானோர் நாட்டைவிட்டு வெளியேறும் நிலையில் உள்ளார்கள், ஆகவே மிகுதியாக உள்ளவர்களை பாதுகாத்து கொள்வதற்கு விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றார்.