2023 தொடக்கத்தில் கொழும்பில் கூடும் தமிழ்க் கட்சிகள்
(LBC Tamil) இனப்பிரச்சினை தொடர்பான பேச்சுக்களை முன்னெடுப்பது தொடர்பில் ஆராய அடுத்த மாதம் அதாவது 2023 தொடக்கத்தில் தமிழ்க் கட்சிகள் கொழும்பில் கூடவுள்ளன.
அதன்படி எதிர்வரும் ஜனவரி 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் கொழும்பில் இந்த சந்திப்பு இடம்பெரும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
கடந்த கலந்துரையாடல் அவசர அவசரமா இடம்பெற்ற நிலையில் இம்முறை அனைவரையும் அழைத்து கலந்துரையாட தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.