யாழ் பல்கலையில் பொங்குதமிழ் பிரகடனத்தின் 24 ஆவது ஆண்டு எழுச்சிநாள் அனுஷ்டிப்பு

பொங்குதமிழ் பிரகடனத்தின் 24ஆவது ஆண்டு எழுச்சிநாள் நிகழ்வுகள் இன்று (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், நிகழ்வில் முதலில் பொங்குதமிழ் பிரகடன உரை நிகழ்த்தப்பட்டு, பின்னர் பொங்குதமிழ் தூபிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டு, தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமை, மரபுவழி தாயகம், தமிழ்த்தேசியம் ஆகியவற்றின் அவசியத்தைக் குறித்த நினைவுகளை பகிர்ந்தனர்.
பின்னணி: பொங்குதமிழ் பிரகடனம் 2001ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் திகதி தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் தாயக உரிமைகளை உலகமறிந்த இடத்தில் உறுதிப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டது. அந்த முக்கிய நாளை நினைவுகூறும் வகையில், இந்த நிகழ்வு ஆண்டுதோறும் அனுஷ்டிக்கப்படுகிறது.