போப்பின் வலது முழங்கையில் காயம்

88 வயதுடைய போப்பாண்டவர் போப் பிரான்சிஸ் நேற்று (வியாழக்கிழமை) வழக்கமான பணிகளைச் செய்யும்போது தவறி கீழே விழுந்தார். இந்த சம்பவத்தில் எலும்பு முறிவுகள் ஏதுமில்லை, ஆனால் அவரது வலது முழங்கையில் காயம் ஏற்பட்டுள்ளது. காயத்திற்கு உடனடியாக மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு கட்டுப்போடப்பட்டுள்ளதாக வத்திக்கான் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

கடந்த 6 வாரங்களில் இது அவருக்கு இரண்டாவது முறை விழுந்த சம்பவமாகும். கடந்த டிசம்பர் 7ஆம் திகதியிலும் அவர் தனது படுக்கையறையில் தவறி விழுந்ததில் கன்னத்தில் காயம் ஏற்பட்டது.

அவரது முழங்கால் பிரச்சினை காரணமாக, போப்பாண்டவர் தற்போது சக்கரநாற்காலியில் இருந்து தான் பெரும்பாலான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இருப்பினும், அவரது உடல் நலனுக்கு தேவையான அனைத்து கவனமும் வழங்கப்பட்டு வருவதாக வத்திக்கான் உறுதிபடுத்தியுள்ளது.

Related Articles

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.