5000 லீட்டர் கசிப்புடன் காத்தான்குடியில் 25 பேர் கைது
மட்டக்களப்பு – காத்தான்குடி பகுதியில் 5000 லீட்டர் கசிப்பு போதைப்பொருளுடன் 25 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை காத்தான்குடி பொலிஸ் பிரிவில் ஆரையம்பதி, தாழங்குடா, புதுக்குடியிருப்பு, நாவற்குடா, மற்றும் கல்லடி உள்ளிட்ட பல இடங்களில் திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
கசிப்பு விற்பனை செய்யும் மற்றும் உற்பத்தி செய்யும் இடங்களில் பொலிஸார் சுற்றிவளைப்பு நடத்தி, கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட பெருமளவிலான உபகரணங்களையும் கைப்பற்றினர். கைதான நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.