பருத்தித்துறையில் 25 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து, கடற்தொழிலில் ஈடுபட்ட 25 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் இரண்டு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கையின் போதே இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமைஅதிகாலை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள தமிழக கடற்தொழிலாளர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணைகள் முன்னெடுத்த பின்னர், கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.