தடுப்பூசி அட்டை இல்லாமல் இந்த இரு இடத்திற்கும் செல்ல முடியாது!
30 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்தவில்லை எனின் இலங்கையின் இரு இடங்களுக்கு செல்ல முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கோவிட் தடுப்பூசி செலுத்தாதவர்கள் பண்டாரவளை மற்றும் மன்னார் ஆகிய இடங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவிட்-19 தொற்று தடுப்பு தொடர்பாக அந்தந்த மாவட்டங்களுக்கான ஒருங்கிணைப்பு குழுவினர்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கோவிட் தடுப்பூசி அட்டை இல்லாமல் குறித்த இரு இடங்களுக்குள் நுழைய முயன்ற 30 வயதிற்கு மேற்பட்ட நபர்களை பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் திருப்பி அனுப்பியுள்ளனர்.
மேலும், இவ்வாறானவர்கள் குறித்த இரு நகரங்களுக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில் பண்டாரவளை மற்றும் மன்னாரின் நுழைவு இடங்களில் சாலைத் தடைகள் செயல்படும் எனவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.