கோவிட் தடுப்பூசிகளைப் பெற்று பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் – சுகாதாரப்பிரிவினர்
வவுனியாவில் கோவிட் தொற்று காரணமாக மரணமடைந்தவர்களில் 89.25 வீதமானவர்கள் எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளாதவர்கள் என சுகாதாரப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் கோவிட் தொற்று பரவல் தொடர்ந்தும் இருந்து வரும் நிலையில், இறப்புக்களும் தொடர்கின்றன.
இந்த நிலையை கருத்திற் கொண்டு மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக வீடுகளில் இருப்பதன் மூலமே நிலமையை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
வவுனியா மாவட்டத்தில் கோவிட் தொற்று காரணமாக ஏற்பட்ட மரணங்களில் 89.25 வீதமானவர்கள் கோவிட் தொடர்பான எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளாதவர்கள்.
10.75 வீதமானவர்கள் தடுப்பூசியின் ஒரு டோஸை மட்டும் பெற்றுக்கொண்டவர்கள். தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்ட எவரும் இதுவரை வவுனியாவில் கோவிட் காரணமாக மரணிக்கவில்லை.
எனவே, 20 வயதிற்கு மேற்பட்டோர் கோவிட் தடுப்பூசிகளைப் பெற்று உங்கள் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு சுகாதாரப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.