17வயது மாணவன் திடீர் மரணம்! யாழில் பெரும் சோகம்!

17 வயது மாணவன் ஒருவர் திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவமானது யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் கிழக்கு பகுதியில் நடைபெற்றுள்ளது.

வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் உயர்தர பிரிவில் கல்வி கற்று வரும் மகிந்தன் எனும் 17 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இன்று காலை சுகயீனம் ஏற்பட்டதை அடுத்து யாழ்ப்பானம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்ட போது, வைத்தியசாலைக்கு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.