தீயாய் பரவும் ஞானசார தேரரின் புகைப்படத்தால் சர்ச்சை!
ஒரே நாடு ஒரே சட்டம் எனும் ஜனாதிபதி செயலனியின் தலைவரான கலகொடஅத்தே ஞானசார தேரரது (Galagoda Aththe GnanasaraThero) உருவத்தை உடைய நபர் ஒருவரது புகைப்படம் மிக வேகமாக சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையினை ஏற்படுத்தி உள்ளது.
குறித்த புகைப்படமானது ஞானசார தேரரின் உடையதா அல்லது கணனி மூலம் முகமாற்றம் செய்யப்பட்ட புகைப்படமா என்பது பற்றிய உறுதியான தகவல் தற்போதுவரை வெளியாகவில்லை.
எனினும், குறித்த புகைப்படம் ஞானசார தேரருடையது இல்லை எனவும், போலியானது எனவும் தெரிவிக்கப்பட்டு வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.