அமைச்சர் ஒருவரை பதவியில் இருந்து நீக்கிய ஜனாதிபதி!
உடனடியாக அமுலாகும் விதத்தில் சுசில் பிரேம ஜயந்த இதுவரை வகித்த இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் பல செயற்பாடுகளை சுசில் பிரேமஜயந்த அண்மை நாட்களாக விமர்சித்து வந்திருந்தார்.
இதனை அடுத்து, அரசினை விமர்சனம் செய்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் அதிகாரத்திற்கு அமைவாகவே உடன் அமுலாகும் வகையில் சுசில் பிரேமஜயந்த வகித்த இராஜாங்க அமைச்சு பதவி நீக்கப்பட்டுள்ளார்.