மற்றொரு அமைச்சரையும் பதவி நீக்க தயராகும் ஜனாதிபதி!
அரசினை விமர்சித்தமைக்காக அடுத்த இரண்டு நாட்களுக்குள் இன்னுமொரு அமைச்சரவை அமைச்சரை பதவி நீக்க ஜனாதிபதி தீர்மானம் எடுத்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அமைச்சரவை அந்தஸ்து உள்ள அமைச்சர்களான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில ஆகியோரை அமைச்சு பதவியில் இருந்து நீக்க ஜனாதிபதி தீர்மானம் எடுத்திருப்பதாகவும் குறித்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரவையின் கூட்டு பொறுப்பினை மீறியமை, அமைச்சரவைக்கு எதிராக நீதிமன்றம் சென்றமை ஆகிய பல குற்றச்சாட்டுக்கள் இந்த அமைச்சர்களிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிராக நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து விலகுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுசில் பிரேமஜயந்தவை அமைச்சர் பதவியில் இருந்து இன்றையதினம் ஜனாதிபதி நீக்கிஇருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.