15 வயது மாணவியின் வீடியோவை வைத்து மிரட்டி பாலியல் துஷ்பிரயோகம் – இருவர் கைது

யாழில் 15வயது மாணவியின் வீடியோவை வைத்து மிரட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இருவர் சுன்னாகம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஏழாலையை சேர்ந்த 20 மற்றும் 25 வயது இளைஞர்கள் என தெரியவந்துள்ளது.

வலிகாமம் வலயத்துக்குட்பட்ட பாடசாலையில் கற்கும் 15 வயது மாணவி ஒருவருடன் இளைஞன் ஒருவன் காணொளி உரையாடலை நடத்திவந்துள்ளான்.

இதன் போது மாணவி துவாயுடன் இருக்கும் காட்சியை குறித்த இளைஞன் பதிவு செய்துள்ளான். பதிவு செய்த அந்த வீடியோவை தனது உறவினரான இன்னொரு இளைஞனோடு பகிர்ந்துள்ளான்.

குறித்த வீடியோ ஏனையோருக்கும் அனுப்பவுள்ளதாக மிரட்டி மாணவியை அவ்இளைஞன் வன்புணர்விற்கு உட்படுத்தியதோடு அந்த காணொளி பதிவு பல இடங்களிலும் பகிரப்பட்டுள்ளது.

மாணவி கற்கும் பாடசாலைக்கும் இவ் விடையம் தெரியவந்ததை அடுத்து ஆசிரியர்களால் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் ஊடாக காவல் நிலையத்துக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதையடுத்து வீடியோ பதிவு செய்த இளைஞனுக்கும், அதனை பயன்படுத்தி மாணவியை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய இளைஞனையும் சுன்னாகம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.