முள்ளியவளை துயிலும் இல்லத்தில் முறுகல் நிலை
முல்லைத்தீவு முள்ளியவளை துயிலும் இல்லத்தில் சிரமதானம் செய்ய சென்றவர்களை சிரமதான பணிகள் மேற்கொள்ள முடியாது என இராணுவத்தினர் தடுத்ததை அடுத்து, குறித்த பகுதியில் முறுகல் நிலை ஏற்பட்டது.
இன்றைய தினம் குறித்த வளாகத்தை சிரமதானம் மேற்கொள்வதற்காக மக்கள் அங்கு சென்ற வேளையில், அங்கு வருகை தந்த 592வது பிரிகேட் இராணுவத்தினர் சிரமதான பணிகளை தடுத்து நிறுத்தி இருந்தனர்.
இதனை அடுத்து குறித்த பகுதிக்கு வருகைதந்த முள்ளியவளை பொலிசாரும், சிரமதான பணிகளை முன்னெடுக்க முடியாது என தடுத்தனர், இந்நிலையில் மக்கள் தாங்கள் சிரமதானத்தை செய்வோம் என விடாப்படியாக நின்றனர்.
இதனை அடுத்து பொலிஸாரும் இராணுவத்தினரும் கலைந்து சென்ற நிலையில் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.