போதைப்பொருளில் இருந்து மாணவர்களை மீட்க புதிய வேலைத்திட்டம்
போதை பொருளுக்கு பாடசாலை மாணவர்கள் அடிமையாகுவதில் இருந்து மீட்பதற்கான விசேட வேலை திட்டம் ஒன்று ஆரம்பிக்கபடவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம், பிரிகேடியர் தர்சன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
இதற்கு அனைத்து தரப்பினரினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும், பெற்றோர்கள் தமது பிள்ளைகள் குறித்து அதி கவனம் செலுத்த வேண்டும் என புனர்வாழ்வு ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, பாடசாலை மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகுவதை தடுப்பதற்கு கல்வி அமைச்சு, பொலிஸார் உள்ளிட்ட தரப்புடன் கலந்துரையாடி விசேட வேலைத்திட்டம் ஒன்றூ முன்னெடுக்கவுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.