LPL தொடரில் Jaffna Kings அணிக்கு இலகு வெற்றி
LPL கிரிக்கெட் போட்டித் தொடரில் இன்று இடம்பெற்ற போட்டியில் லைக்காவின் Jaffna Kings மற்றும் Colombo Stars அணிகள் மோதின.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற லைக்காவின் Jaffna Kings அணி முதலில் பந்துவீசி தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய Colombo Stars அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 128 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
Colombo Stars அணி சார்பில் Dominic Drakes அதிகபட்சமாக 38 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து லைக்காவின் Jaffna Kings அணிக்கு 129 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய Jaffna Kings அணி 15.5 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்களை மாத்திரமே இழந்து வெற்றியிலக்கை அடைந்துள்ளது.
Jaffna Kings அணி சார்ப்பில் ரஹ்மனுல்ல குர்பாஸ் 69 ஓட்டங்களையும், அவிஷ்க பெர்ணான்டோ ஆட்டமிழக்காமல் 40 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
அதனடிப்படையில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் Jaffna Kings அணி வெற்றி பெற்றுள்ளது.