திவாலான நிலையில் இருந்து இலங்கை சில மாதங்களில் மீளும்
இந்த வருடத்தின் சில மாதங்களில் இலங்கை திவாலான நிலையில் இருந்து மீளும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், இலங்கை ஒரு திவாலான தேசம் அல்ல என்றும், மீண்டும் எழுச்சி பெறும் தேசம் என்றும், விரைவில் திவாலான தேசம் என்ற முத்திரையை கிழிக்க முடியும் என்றும் கூறினார்.
“நாங்கள் கடனைத் திருப்பிச் செலுத்தத் தொடங்கினோம். புதிய முதலீடுகளை கொண்டு வர முடியும். சம்பளம் உயர்த்தப்படும். வரி மற்றும் வங்கி வட்டி விகிதங்கள் குறையும். அதன் மூலம் நாடு முன்னேறுவதற்கான பாதையைத் தொடங்கும்,” என்றார்.
பலரால் இந்த முன்னேற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், எனவே இதனை நாசப்படுத்துவதற்கு எதனையும் செய்வதாகவும் அமைச்சர் நாணயக்கார மேலும் தெரிவித்தார்.