மனித புதைகுழிக்கு நீதி கேரி வடக்கு கிழக்கில் நாளை ஹர்த்தால்!
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கேரி வடக்கு கிழக்கில் நாளை வெள்ளிக்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட உள்ளது.
அத்தோடு வட்டுவாக்கால் பாலத்தில் இருந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரை பேரணி ஒன்றும் முன்னெடுக்கபடவுள்ளது.
நாளை வெள்ளிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் இந்த ஹர்த்தாலுக்கு வலுச்சேர்க்கும் முகமாக முல்லைத்தீவில் நீதி கேரி இடம்பெறுகின்ற பேரணியில் அனைத்து தரப்பினரையும் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஹர்த்தாலுக்கு பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ் அரசியல் கட்சிகள், தனியார் போக்குவரத்து சங்கம் உள்ளிட்ட பல தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.