“மலையகம் 200” தலைமன்னாரில் இருந்து மாத்தளை வரை நடை பவணி

“மலையகம் 200″தலைமன்னாரில் இருந்து மாத்தளை வரை நடை பவணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பெருந்தோட்டங்களில் பணிபுரிவதற்காக இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு அழைத்துவரப்பட்ட மக்களின் தடங்களை நினைவுகூருவதற்கும் வேர்களுடன் தொடர்பினை ஏற்படுத்துவதற்கும் “வேர்களை மீட்டு உரிமை வென்றி” எனும் தொனிப்பொருளில் இடம்பெறவுள்ளது.

மாண்புமிகு மலையக மக்கள் கூட்டிணைவால் தலை மன்னாரிரில் இருந்து மாத்தளை வரை ஜூலை 28ம் திகதியிலிருந்து ஆகஸ்ட் 12ம் திகதி வரை இந்த நடைபயணம் இடம்பெறவுள்ளது.



