இலங்கையின் நவீன துட்டகைமுனுவிற்கு வந்த கஸ்டகாலம்!
நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கிய காரணமானவர்கள் என உயிர் நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள பசில் ராஜபக்ச, கோட்டாய ராஜபக்ச உள்ளிட்ட ஏனைய தரப்பினரது குடியுரிமையை பறிக்கும் யோசனை கொண்டு வந்தால் அதற்கு இரு கைகள் அல்ல இரு கால்களையும் உயர்த்தி ஆதரவு வழங்குவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு யார் காரணமானவர்கள் என்பதை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது, இந்த தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது, பொருளாதார ரீதியில் எடுத்த தவறான தீர்மானங்களினால் நாடு வங்குரோத்து நிலை அடைந்தது என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
பொருளாதார படுகொலையாளர்கள் என அறிவிக்கப்பட்டுள்ள பசில் ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச உட்பட ஏனைய தரப்பினரது குடியுரிமையை பறிக்கும் யோசனை கொண்டு வந்தால் அதற்கு இரு கைகள் அல்ல இரு கால்களையும் உயர்த்தி ஆதரவு வழங்குவேன் என தெரிவித்துள்ளார்.