குற்ற விசாரணை பிரிவின் முன்னாள் பிரதானியை கொல்ல பிள்ளையானுடன் டீலா??

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணைகளில் இருந்து முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷாவை காப்பாற்றும் நகர்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் தற்போது இராஜாங்க அமைச்சராக இருக்கும் புள்ளையான் எனப்படும் சிவனேசன்துரை சந்திரகாந்தனை ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி சுரேஷ் சாலே இனவாத பௌத்த துறவி ஒருவருடன் இரகசியமாக மட்டக்களப்பில் வைத்து சந்தித்தமை அம்பலமாகியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர் ஈஸ்டர் தின தற்கொலை தாக்குதலின் பின்னணியில் பிள்ளையானுக்கும் தொடர்புகள் உள்ளதாக  சனல் 4 ஊடகம் தகவல் வெளியிட்டிருந்தது.

தாக்குதலுடன் தொடர்புபட்டதாக கூறப்பட்ட அரசு புலனாய்வுத் துறையின் பணிப்பாளரான  சுரேஸ் சாலே, பிள்ளையான் மற்றும் இனவாத பௌத்த பிக்கு ஆகிய மூவருக்கும் இடையில் இந்த ரகசிய சந்திப்பு இடம் பெற்றுள்ளது.

அத்துடன் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விசுவாசியான குற்ற விசாரணை பிரிவின் முன்னாள் பிரதானி சாணி அபேசேகரவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் உச்ச நீதிமன்றில் உறுதி செய்துள்ளது.

இந்நிலையில் பிள்ளையான் மூலம் சானி அபேசேகரவை இலக்கு வைக்க முயற்சிகள் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.