யாழில் 800 ரூபா கடனை திருப்பி கொடுக்காத இ.போ.ச சாரதி அடித்து கொலை!!
800 ரூபா கடன் பணத்தைக் கேட்டு இளம் குடும்ப தலைவர் மீது இளைஞன் ஒருவன் நடத்திய தாக்குதலால், அடி காயங்களுடன் யாழ் போதனா மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றவர் நேற்று முன்தினம் சனிக்கிழமை உயிரிழந்தார்.
உரும்பிராய் கிழக்கு, வளர்பிறை சனசமூக நிலையயத்தடியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சிங்கரத்தினம் சிவாஸ்குமார் (40) என்ற இ.போ.ச பஸ் ஓட்டுனரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் கடந்த 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு ஊரெழு மேற்கில் அமைந்துள்ள வீடொன்றுக்கு வழமை போன்று சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த இளைஞன் ஒருவன், தனக்கு வழங்க வேண்டிய 800 ரூபா கடன் பணத்தை கேட்டு சிவாஸ்கரன் மீது கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளார். பின் அவரை தானே அழைத்து வந்து சிவாஸ்கரனின் வீட்டில் சேர்த்து விட்டு சென்றுள்ளார்.
அடிகாயங்களுக்கு இலக்காகி உடல்நிலை மோசமடைந்திருந்த சிவாஸ்குமாரை மறுநாள் திங்கட்கிழமை மாலையில் வீட்டார் யாழ் போதனா மருத்துவமனையில் சிகிச்சைகளுக்காக சேர்த்தனர்.
கடந்த ஆறு நாட்களாக யாழ் போதனா மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் சனிக்கிழமை உயிரிழந்தார்.
இவரின் உயிரிழப்பை அடுத்து தாக்குதல் நடத்திய இளைஞன் கோப்பாய் போலீஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளான்.