யாசகர்களின் எண்ணிக்கை நாட்டில் அதிகரிப்பு..!
பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டில் யாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
உலக பொருளாதார நெருக்கடியோடு நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நிலமை காரணமாக நகர பிரதேசங்களில் யாசகர்கள் அதிகரித்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல குறிப்பிட்டுள்ளார்.
யாசகர்களுக்கு புனர்வாழ்வு அழித்து அவர்களை நாட்டின் பொருளாதார அபிவிருத்தியில் பங்கெடுக்க வைக்கும் எவ்வித முறையான வேலைத்திட்டமும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாசகம் கேட்பது பணம் ஈட்டும் தொழிலாக உருவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ள ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சமூகவியல் சிரேஷ்ட பேராசிரியர் மயூர சமரகோன் மாணவர்கள் 4 பேரை வைத்து கதரகம பகுதியில் மேற்கொண்ட பரிசோதனையில் ஒரு மணிநேரத்தில் அங்குள்ள யாசகர்கள் 4000 ரூபா வரை பணம் சேர்ப்பது கண்டரிப்பட்டதாக குறிப்பிட்டார்.