ஜனாதிபதி வேண்டினால் யுக்தியவை நிறுத்துவோம், தேசபந்து தென்னகோன் அறிவிப்பு
யுக்திய நடவடிக்கையை நிறுத்துமாறு மூன்று நான்கு பேர் கூச்சலிட்டாலும் 99 வீத மகா சங்கரத்தினரும் நாட்டு மக்களும் யுக்திய நடவடிக்கையை தொடருமாறு கோருவதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையை நிறுத்துமாறு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சட்டமன்றம் அறிவுறுத்தினால் மாத்திரமே நிறுத்தப்படும் எனவும் இல்லையெனில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கப்படும் வரை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
எந்த நடவடிக்கையை ஆரம்பித்தாலும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் மதுபான கடத்துபவர்களை முன்விரோதம் காரணமாக பொலிஸாரால் துன்புறுத்தப்படுவதாக பொலிஸில் முறைப்பாடு செய்வதாக பதில் பொலிஸ் மா அதிபர் குறிப்பிடுகின்றார்.
நாட்டின் சட்டம், மக்களின் மனித உரிமைகள் மற்றும் அறநெறிகளுக்கு அமைவாக இந்த நடவடிக்கை தொடரும் என பதில் பொலிஸ் பரிசோதகர் மேலும் தெரிவித்தார்.
யுக்திய நடவடிக்கை தொடர்பில் ஊடகவியளாலர் எழுப்பியகேள்விக்கு பதில் பொலிஸ் மா அதிபர் திரு.தேஷ்பந்து தென்னகோன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.