பிரித்தானிய பிரதமர் மற்றும், அரசர் சாள்சிடம் கடிதம் கையளிப்பு!

இன்று 05/02/2024 தன்னாட்சிக்கான எழுச்சி போராட்டத்தின் கொள்கை பிரகடனத்தின் அரசியல் விருப்பையும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தமிழீழ மக்களாகிய எமக்கு அரசியற் தீர்வு அமைய வேண்டும் என வலியுறுத்தி கடிதம் ஒன்று பிரித்தானிய பிரதமருக்கும், வெளிவிவகார அமைச்சுக்கும், பிரித்தானிய அரசர் மதிப்பிற்குரிய மூன்றாம்
சாள்ஸ் அவர்களிடமும் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தினை அனைத்துலக இளையோர் அமைப்பு, அனைத்துலக இராசதந்திரகட்டமைப்பு மற்றும் அனைத்துலக ஈழத்தமிழர் அவை சார்பாக பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் பிரித்தானிய பிரதமருக்கும், வெளிவிவகார அமைச்சுக்கும் வழங்கிய தோடு,

பிரித்தானிய அரசாட்சியில் எடுக்கப்பட்ட தவறான அரசியல் முடிவே தமிழினம் இன்று வரை சந்தித்து வரும் சிங்கள தேசத்தின் இன அழிப்பிற்கு காரணமாக அமைந்து வருகின்றது என்பதையும் வரலாற்று ரீதியாக இந்த கடிதத்தில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.