வவுனியாவில் உள்ள கிணற்றில் இருந்து துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு
வவுனியா, பம்மடுவ தமிழ் பிரதேச சபை காணியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து T-56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்து 2298 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
நீண்ட நாட்களாக அபிவிருத்தி செய்யப்படாமல் இருந்த பிரதேச சபை காணியை நிர்மாணிக்கும் போது அங்கிருந்த பழைய கிணற்றை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் சில உயிருள்ள தோட்டாக்களை கண்டெடுத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா நீதவான் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் பூவரசங்குளம் பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் கிணற்றை பரிசோதித்த போது குறித்த வெடிபொருட்களை கண்டுபிடித்துள்ளனர்.
கண்டெடுக்கப்பட்ட உயிருள்ள தோட்டாக்கள் இறுதி யுத்தத்தின் போது அந்த இடத்திலுள்ள இராணுவ முகாமில் பயன்படுத்தப்பட்டவை எனவும் அந்த முகாமில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் கிணற்றில் இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.