மறைந்த சம்பந்தனின் வீடு அரசிடம் கையளிக்கப்படவில்லை
முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு வழங்கப்பட்ட கொழும்பு உத்தியோகப்பூர்வ இல்லம் சுமார் மூன்று வருடங்களாகியும் இதுவரை அரசாங்கத்திடம் கையளிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஒதுக்கப்பட்ட விடுதியை தக்க வைக்கவே மரணம் வரை இரா.சம்பந்தன் அரச விசுவாசத்தை காண்பித்ததாக கூறப்படுகின்றது.
இதனிடையே உத்தியோகப்பூர்வ இல்லத்தை மீண்டும் அரசாங்கத்திடம் பெற்றுக்கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை புதிய பிரதம அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் இதற்கான பத்திரத்தை கையளிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2015ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்றதன் பின்னர் இரா.சம்பந்தனுக்கு உத்தியோகப்பூர்வ இல்லம் வழங்கப்பட்டிருந்தது.
நல்லாட்சி அரசாங்கத்தின்போது அப்போதைய காணி அமைச்சர் கயந்த கருணாதிலகவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தின் பிரகாரம், 2019 பெப்ரவரி 26 ஆம் திகதி எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி, இரா.சம்பந்தன் இருக்கும் வரை அந்த வீட்டை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டார்.
2017 ஆம் ஆண்டு அந்த வீட்டின் பழுது பார்க்கும் பணிக்காக மூன்று கோடியே ஐம்பது லட்சம் ரூபாய் செலவிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.