யாழில் ஈபிடிபி வேட்பு மனு தாக்கல்

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் முதன்மை வேட்பாளரான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ் தேர்தல் அத்தாட்சி அலுவலகத்தில் 9 ஆவது நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று திங்கட்கிழமை (07)  தாக்கல் செய்யப்பட்டது.

எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் பட்டியல் அடங்கிய வேட்பு மனு மாவட்ட தேர்தல் அலுவலரிடம் கையளிக்கப்பட்டது.

வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா,

வடக்கின் ஐந்து மாவட்டங்கள் கிழக்கில் மூன்று மாவட்டங்கள் கொழும்பு உள்ளடங்களாக ஒன்பது மாவட்டங்களில் ஈ.பிடி.பி தனது வீணை சின்னத்தில் போட்டியிடவுள்ளது.

கொழும்பிலுள்ள எமது கட்சியின் ஆதரவாளர்கள் கொழுப்பிலும் போட்டியிடுமாறு விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இம்முறை கொழும்பு மாவட்டத்திலும் போட்டியிடுகின்றோம்.

ஆரம்பகாலம் முதல் ஈ.பிடி.பி தொடர்ச்சியாக கூறிவரும் தேசிய நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் அதை வலுப்படுத்தும் நோக்குடன் கொழும்பு மாவட்டம் பல்லின பல மொழி பேசும் மக்கள் வாழும் இடமாக இருப்பதனால் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கி வேட்பாளர்கள் களமிறங்ககின்றனர்.

அந்தவகையில் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற எமது கட்சியின் இலக்கை அடைய வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் எமது மக்கள் எமது கட்சிக்கு அணிதிரண்டு வாக்களித்து எம்மை வெற்றிபெறச் செய்வார்கள் என நம்புகின்றேன்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.