வவுனியாவில் சர்வதேச தரத்திலான விளையாட்டு கட்டடம் திறக்கப்பட்டது

வவுனியா ஓமந்தையில் சர்வதேச தரத்திலான விளையாட்டுக் கட்டடத் தொகுதி இன்று (18) திறந்து வைக்கப்பட்டது.

2015 ஆம் ஆண்டு 16 கோடி ரூபாய் நிதியுடன் தொடங்கப்பட்ட கட்டிடத்தின் அபிவிருத்தி பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போதைய அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டினால் மொத்தம் 30 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு, உள்ளக விளையாட்டு அரங்கும், நீச்சல் தடாகமும் புதுப்பிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ரியல் அட்மிரல் செமால் பெர்னான்டோ, உதவி பணிப்பாளர் கே. டபிள்யூ. டி. கே. கொஸ்தா, மற்றும் வவுனியா அரசாங்க அதிபர் பி.எஸ். சரத் சந்திர ஆகியோர் கலந்து கொண்டு கட்டடத்தை திறந்து வைத்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.