திலீபனுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு பிரசாரத்தை ஆரம்பித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று நல்லூர் பின் வீதியில் உள்ள தியாக தீபம் திலீபன் நினைவாலயத்தில் பிரசார பணிகளை ஆரம்பித்தனர்.
தியாக தீபத்தின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, சுடரேற்றி வணக்கம் செலுத்திய பின்னர், பிரசார நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர்.
இந்நிகழ்வில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் பங்கேற்றனர்.





