சிலாபத்தில் மூவர் கொலை?

சிலாபம், சிங்கபுர பகுதியில் இன்று (20) ஏற்பட்ட தீப்பரவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் குறித்து பொலிஸார் கொலையாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இதற்காக, சிலாபம் தலைமையக பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ அறிவித்துள்ளார்.

சம்பவம் இன்று காலை 6.00 மணியளவில் சிலாபம் – சிங்கபுர பகுதியில் உள்ள இரண்டு மாடி வீடொன்றில் தீ பரவியதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, பொலிஸார் மற்றும் தீயணைப்பு பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

தீயை கட்டுப்படுத்திய பிறகு, அதிகாரிகள் நடத்திய சோதனையில் மூன்று சடலங்கள் மீட்கப்பட்டன. உயிரிழந்தவர்களில் 51 வயதுடைய வீட்டின் உரிமையாளர் சேனாரத்ன, அவரது மனைவி 44 வயதான மஞ்சுளா நிரோஷனி, மற்றும் அவர்களது 15 வயது மகள் நெத்மி நிமேஷா என அடையாளம் காணப்பட்டனர்.

சடலங்கள் குறித்து பொலிஸார் தெரிவித்ததாவது: தாயின் சடலம் வீட்டு கீழ்த் தளத்தில் உள்ள படுக்கையில் காணப்பட்டது, மேலும் அவரது கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இருந்தது. தந்தை மற்றும் மகளின் சடலங்கள் வீட்டு வரவேற்பறையில் கண்டெடுக்கப்பட்டன.

உயிரிழந்த மஞ்சுளா நிரோஷனி சிலாபம் பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக பணியாற்றியதுடன், அப்பிரதேச அறநெறி பாடசாலையில் ஆசிரியையாகவும் இருந்தார். அவரின் கணவர் நிலம் மற்றும் போக்குவரத்து வணிகத்தில் ஈடுபட்டிருந்தார். மகள் நெத்மி நிமேஷா, சிலாபம் ஆனந்த தேசிய பாடசாலையில் கல்வி பயின்று, அடுத்த வருடம் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்தார்.

சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, இந்த வீட்டில் இருந்து சுமார் 25 இலட்சம் மதிப்பிலான தங்க ஆபரணங்கள் காணாமல் போனதாகவும் கூறப்படுகிறது.

இன்று பிற்பகல் நீதவான் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், சடலங்கள் சிலாபம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.