இந்த ஆண்டில் இதுவரை இலஞ்சம், ஊழல் தொடர்பாக 3,045 முறைப்பாடுகள்
இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பாக 2024 ஆம் ஆண்டு முதல் 9 மாதங்களில் 3,045 முறைப்பாடுகள் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ளது. இந்த காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 81 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதோடு, 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 20 பொலிஸ் அதிகாரிகள், 3 கிராம உத்தியோகத்தர்கள், மற்றும் 45 அரச ஊழியர்கள் உள்ளனர். மேலும், 22 சிவில் பாதுகாப்பு அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், 68 நபர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், 237 பேருக்கு எதிராக நீதிமன்ற விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.