பொதுத் தேர்தலின் பாதுகாப்பிற்காக தயார் நிலையில் பொலிஸார்!
இன்று (12) முதல் பொதுத் தேர்தலின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் சுமார் 64,000 பொலிஸ் அதிகாரிகள் வாக்களிப்பு நிலையங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இதற்காக 13,383 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதேபோல், 3,200 விசேட அதிரடிப்படை அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர், மேலும் 12,227 சிவில் பாதுகாப்பு பணியாளர்கள் நேரடியாக தேர்தல் கடமையில் ஈடுபடவுள்ளனர். முக்கிய இடங்களின் பாதுகாப்பிற்காக 11,000 இராணுவ வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர், மேலும் தேவையாயின் பிற இராணுவ அதிகாரிகளும் தயார் நிலையில் இருப்பர்.
நிஹால் தல்துவ, சுதந்திரமான மற்றும் அமைதியான தேர்தலை நடாத்த அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.