வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையதளம் சைபர் தாக்குதலுக்கு இலக்காகியது!

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையதளம் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதலின் பின்னர், இணையதளத்தை மீளமைக்க அதிகாரிகள் செயற்பட்டு வருவதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு (CERT) தெரிவித்துள்ளது.
தாக்குதலால் தற்காலிகமாக சேவைகள் பாதிக்கப்பட்டிருப்பதுடன், வெப்சைட்டை மீண்டும் இயல்புநிலைக்கு கொண்டுவர அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.



