ரயிலின் மிதி பலகையில் பயணித்த இளைஞன் உயிரிழப்பு!
பொல்கஹவலயில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த ரயிலின் மிதி பலகையில் பயணித்த 21 வயது இளைஞர் ஒருவர், ரயில் பாதையின் சமிக்ஞை கம்பத்தில் மோதி உயிரிழந்துள்ளார் என்று கிரிபத்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் தற்போது ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் கிரிபத்கொடை பொலிஸாரின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம், ரயில்களில் பாதுகாப்பற்ற முறையில் பயணிக்கும் தவறுகளை மீண்டும் நினைவூட்டுகிறது.