அநுரவின் ஆட்சியில் ஏமாற்றப்பட்ட விடயங்கள் இதோ
1. அரச சொத்துக்களை வீண்விரயம் செய்கிறார்கள் என்ற பெயரில் ஏலவே இருந்த அரசியல்வாதிகள், அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள் மற்றும் ஏனையோரின் வாகனங்களை கொண்டுவந்து காலிமுகத்திடலில் போட்டு Car Show காட்டியது.
2. கள்வர்களைப் பிடித்து சிறையிலடைப்போம் என்ற கூற்றையே வேதவாக்காக கொண்டு ஆட்சிக்கு வந்தவர்கள் ஆனால் இன்றுவரைக்கும் அவ்வாறு யாரையும் கள்வர் என்று சொல்லி பிடித்து சிறையிலடைக்கவில்லை!
3. IMF உடனான உடன்படிக்கையை “மக்களை பாதிக்கும் விடயங்கள்” இல்லாத உடன்படிக்கையாக மாற்றுவோம் என்றவர்கள் அவ்வாறான எந்தவித மாற்றமும் மேற்கொள்ளாமல் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட அதே உடன்படிக்கையையே தொடர்ந்தும் செயற்படுத்துவது.
4. உகண்டா மற்றும் பல நாடுகளில் உள்ள கறுப்புப் பணத்தை நாட்டுக்கு கொண்டுவருவோம் என்றவர்கள், ஆட்சிக்கு வந்த பின்னர் நாங்கள் அப்படி சொல்லவேயில்லை என்று திருப்பியடித்தது.
5. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வரப்பிரசாதங்கள் அத்தனையும் நிறுத்தப்படும் என்றவர்கள், தேர்தலுக்குப் பின்னர் வந்து நாங்கள் அப்படி சொல்லவேயில்லை என்றது.
6. பெற்றோலுக்கு 150ரூபாவுக்கும் அதிகமான கொமிசன் பெறுகிறார்கள், நாங்கள் வந்தால் அதனை இல்லாமல் செய்வோம் என்றவர்கள் அவர்கள் ஆட்சிக்கு வந்த பின்னும் அந்த கொமிசனைப் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள் போல இன்னும் அந்த 150ஐ குறைக்காமல் இருப்பது.
7. ராஜபக்ஷ கூட்டம் திருடர்கள், அந்த கூட்டத்தை சிறையிலடைப்போம் என்றவர்கள், இன்று அந்த ராஜபக்ஷ கூட்டமே வந்து “எங்களைத் திருடர்கள் என்று சொன்னதை நிரூபியுங்கள், இல்லாவிட்டால் சட்டநடவடிக்கை எடுப்போம் என்று கூறியும், இவர்கள் அமைதியாக இருப்பது.
8. இன, மத, மொழி பாகுபாடு இல்லை என்று சொன்னவர்கள், ஆட்சியை ஆரம்பிக்கும்போதே இஸ்லாமிய இனத்தவர் யாரையும் அமைச்சுக்கு உள்வாங்காமல் “திறமையற்றவர்கள்” என்ற பொய் காரணத்தை கூறி ஒரு இனத்தை கேவலப்படுத்தியிருப்பது.
9. இது மக்களுக்கான அரசாங்கம், மக்களுக்கு சேவை செய்வதற்காகவே நாங்கள் வந்திருக்கிறோம் என்றவர்கள், நாட்டில் ஒரு வாரத்திற்கும் மேலாக ஏற்பட்டிருக்கும் அனர்த்த நிலைமைக்கு இதுவரைக்கும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் நிவாரணமும் வழங்காமல் இருப்பது.
10. தவிரக்க முடியாமல் போன பாஸ்போர்ட் வரிசை, நிர்ணயிக்க முடியாமல் போன முட்டை விலை, இறக்குமதி செய்யமாட்டோம் என சொல்லியும் முடியாமல் போன, இறக்குமதி செய்த 7000 டொன் நாட்டரிசி, அதே வரிசையில் தேர்தலுக்கு கோசமாக மட்டும் பயன்படுத்திய “நிலவின் முதுகுபோல” இற்றை வரைக்கும் நமக்கு காட்டாமல் ஏமாற்றிய Bar Licence எடுத்தவர்களின் List