முல்லைத்தீவில் திருட்டு : தந்தை மற்றும் மகன் கைது
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு விசுவமடு பகுதியில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் 72 வயதான தந்தை மற்றும் 24 வயதான மகன் நேற்று (03) புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வருடம் புதுக்குடியிருப்பு விசுவமடு 10ஆம் கட்டை பகுதியில் அமைந்துள்ள வீட்டின் தளபாடங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பொருட்கள் உறவினர்களால் திருடப்பட்டதாகக் கூறப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளர்கள் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை தொடர்ந்து, பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
விசாரணைகளின் போது, திருடிய பொருட்களுடன் சந்தேக நபர்கள் பிடிபட்டுள்ளனர். இதையடுத்து, அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
பொலிஸார் தொடர்ந்து இதுதொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.