பிரபாகரன் தப்பிக்க மஹிந்த வழியமைத்தார் : சரத் பொன்சேகா
யுத்த காலத்தில் கூட மஹிந்த ராஜபக்ஷவுக்கு விடுதலைப் புலிகளால் அச்சுறுத்தல் காணப்படவில்லை என்று பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது,
அவரது பாதுகாப்பு தற்போது குறைக்கப்பட்டதில் பாதுகாப்பு தொடர்பான சிக்கல்கள் ஏதுமில்லை. பிரபாகரன் உள்ளிட்டோர் தப்பிச் செல்ல வேண்டும் என்பதற்காக 2009இல் மஹிந்த போர் நிறுத்தத்தை அறிவித்தார்.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் கூட மஹிந்த மீது பயங்கரவாதிகள் தாக்குதல்கள் நடத்தவில்லை என தெரிவித்தார்.