புதிய இந்தியாவை படைப்போம்!
189. எனது சகோதரர்களே! நாம் அனைவரும் கடுமையாக உழைப்போமாக. உறங்குவதற்கு இது நேரமில்லை .
எதிர்கால இந்தியா நமது உழைப்பைப் பொறுத்துத்தான் அமைந் திருக்கிறது. இந்தியத் தாய் தயாராகக் காத்திருக்கிறாள்.
அவள் உறங்கிக்கொண்டு மட்டும்தான் இருக்கிறாள்,
எழுமின்! விழிமின்! இந்த நமது தாயக மாகிய பாரததேவி, தனது அழிவற்ற அரியணை யின் மீது புத்திளமை பெற்றவளாக, முன்பு எப்போதுமே இருந்ததைவிடவும் அதிகமான மகிமை கொண்டவளாக அமர்ந்திருப்பதைக் காணுங்கள்.
190. ஒரு பெரிய மரத்தில் அழகான ஒரு பழம் பழுத்துக் கனிகிறது. பிறகு அந்தப் பழம் கீழே விழுந்து அழுகுகிறது.
அந்த அழுகிய கனியி விருந்து தரையில் வேர் பாய்ந்து, அதிலிருந்து முன்பை விடப் பெரிய ஒரு மரம் தழைத்துக் கிளப்புவதைப் பார்க்கிறோம்.
இத்தகைய ஒரு சதைசையிலிருந்து இந்தியர்களாகிய நாம் இப்போது வெளியே வந்திருக்கிறோம்.
– இப்போது எனக்கு ஒரே ஒரு விருப்பம் தான் மேலோங்கி நிற்கிறது. அது கும்ப கர்ணனைப் போல உறக்கத்தில் ஆழ்ந்தும், தன் ஆண்மைத்தனத்தில் நம்பிக்கை இழந்தும், எந்த ஒரு பதில் உணர்ச்சியும் இல்லாமலும் இருக் கும் நமது நாட்டைத் தட்டி எழுப்ப வேண்டும் என்பதுதான்.
192. இந்த நாட்டின் முன்னேற்றத்திற்காகவே உழைத்து வரும் ஒருவன் என்ற முறையில் குறைந்த பட்சம் இந்த நாட்டின் முன்னேற்றத் இற்காக உழைக்க முயற்சி செய்யும் ஒருவன் என்ற முறையில் நான் உங்களுக்குச் சொல்ல விரும்புவது இதுதான்:
நாம் ஆன்மிகத் துறையில் வளர்ச்சி பெறாத வரையில் நம் நாடு முன்னேற்றமடைய முடியாது.
193. அரசியல், சமூக முன்னேற்றங்கள் எல்லாம் அவசியமல்ல என்று நான் சொல்லவில்லை.
ஆனால் அவையெல்லாம் இந்த நாட்டிற்கு இரண்டாம் தரமான முக்கியத் துவமே உடையன என்றும், ஆன்மிகமே இங்கே தலைசிறந்ததாகும் என்றும் நான் கூறுகிறேன்.
இதை நீங்கள் எப்போதும் உங்கள் நினைவில் பதியவைத்துக்கொள்ள வேண்டும்.
194. இந்தியா அழிவே இல்லாத ஆன்மிக பூமி. இந்த நாடு இப்போது வீழ்ச்சியடைந்து விட்டது. அதில் சந்தேகமே இல்லை.
ஆனால் இந்த நாடு நிச்சயமாக எழுச்சி பெறும். எழுந்து நிற்கும் அதன் முழக்கம் உலகம் முழுவதையுமே பிரமிக்கவைக்கும்.
கடலில் பெரிய அலைகள் எந்த அளவு கீழே விழுகின்றனவோ, அந்த அளவு உயரத்திற்கு அதைவிட ஆற்ற லோடு மறுபடியும் எழும்.
195. அயல்நாட்டு உதவியை நீங்கள் நம்பியிருக்கக் கூடாது. தனி மனிதர்களப் போலவே கேசங்களும் தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்ள வேண்டும். இதுவே உண்மையான தேச பக்தி.
196. உங்கள் உதடுகளை மூடிக்கொண்டு உங்கள் இதயத்தைத் திறந்து விடுங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் நாட்டின் சுமை முழுவதும் உங்களின் தோள்களின் மீதே சுமத்தப்பட்டிருப்பதாக எண்ணிக் கொண்டு, இந்த நாட்டின் கதிமோட்சத்திற்காகவும் உலகத்தின் கதிமோட் சத்திற்காகவும் பணியாற்றுங்கள்.
197. எவனுடைய இதயம் ஏழைகளுக்காக இரத்தம் வடிக்கிறதோ அவனையே நான் மகாத்மா என்பேன்; மற்றவர்கள் துராத் மாக்களே ஆவர்.
நான் தத்துவஞானியல்லேன்; ஆத்ம ஞானி யுமல்லேன்; நான் ஏழை; ஏழைகளை நேசிக் கிறேன்; அவ்வளவுதான்.
***********
விவேகானந்தர் சொன்ன ஏனைய தத்துவங்கள்
இந்தியப் பெண்மணிகள் பற்றி சுவாமி விவேகானந்தர் சொன்ன கருத்துக்கள்!
கல்வியின் அவசியம் பற்றி விவேகானந்தர் சொன்ன தத்துவங்கள்!