ஊஞ்சல் கயிறு இறுக்கியதில் 10 வயது சிறுவன் பரிதாபமாக பலி!

முல்லைத்தீவு செம்மலை பகுதியில் சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்றைய தினம் மாலை இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு செம்மலை பகுதியில் நேற்று (20) மாலை 4.30 மணியளவில் வீட்டில் ஊஞ்சல் ஆடி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கழுத்தில் ஊஞ்சல் கயிறு சுற்றி இறுகியுள்ளது. இதனையடுத்து குறித்த சிறுவனை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் முன்னரே குறித்த சிறுவன் உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.

குறித்த சம்பவத்தில் 10 வயதுடைய பிரசாத் தனேஷ் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் செம்மலை மகாவித்தியாலயத்தில் அதிக மதிப்பெண் (140) எடுத்த மாணவன் இவன் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பாெலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பெற்றோர்கள்!!! பிள்ளைகள் விளையாடுகின்ற பொழுது பெரியவர்கள் யாராவது ஒருவர் பிள்ளைகள் விளையாடுவதை கண்காணிப்பதனை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கல்வியில் சிறந்தவனாக வளர்ந்து சாதனை படைக்கும் திறமை கொண்ட சிறுவனை இழந்தமை மிகவும் மன வேதனைக்குரிய விடயமே.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.