வற்றாப்பளையில் 16 வயது சிறுவன் சடலமாக மீட்பு!

முல்லைத்தீவு வற்றாப்பளை பகுதியில் உள்ள நீர் நிலையிலிருந்து 16 வயதுடைய சிறுவன் ஒருவன் இன்று புதன்கிழமை (26) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு வற்றாப்பளையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வருகை தந்த சிறுவன் நேற்று செவ்வாய்க்கிழமை (25) காணாமல் போயிருந்த நிலையில் உறவினர்களால் தேடப்பட்டு வந்துள்ளார்.

தேடுதல் நடவடிக்கையின் போது நீர் நிலை ஒன்றிலிருந்து இன்றையதினம் காலை சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுவன் கொலை செய்யப்பட்டு நீரில் வீசப்பட்டானா? அல்லது விபத்தா என்ற கோணத்தில் முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.