மின்னல் தாக்கி 42 வயது நபர் பலி

இரத்தினபுரி, தெல்வல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பபோடுவ பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் 42 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்வமானது நேற்று சனிக்கிழமை (25) இடம்பெற்றுள்ளது.
உலோக வாளியைப் பயன்படுத்தி குளித்துக் கொண்டிருந்த போது மின்னல் தாக்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் மின்னல் தாக்கத்தினால் காயமடைந்த உயிரழதவரின் மனைவி இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்த விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 
				


