யாழில் இரண்டு பிள்ளைகளின் தாய் கிணற்றில் சடலமாக மீட்பு
இரண்டு பிள்ளைகளின் தாயான 37 வயதுடைய இளம் குடும்ப பெண் ஒருவர் வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் யாழ்ப்பாணம் மாதகல் – சகாயபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் நேற்று பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
வலி. தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக குறித்த பெண் கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.