பெருமளவு கேரள கஞ்சாவுடன் கிளிநொச்சியில் ஒருவர் கைது

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் பொலிஸார் இன்று திங்கட்கிழமை அதிகாலை மேற்கொண்ட சோதனையின் போது 350 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டது.
கேரள கஞ்சாவை கூலர் ரக வாகனத்தில் மறைத்து கடத்த முயன்ற சந்தேகநபர், கிளிநொச்சி தர்மபுரம் ஏழாம் வட்டாரத்தை சேர்ந்தவரென தெரியவந்துள்ளது.
வடமராட்சி பகுதியிலிருந்து கேரள கஞ்சா கடத்தப்படுவதாக இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடவடிக்கை முன்னெட்டுக்கப்பட்டது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.