புதையல் தோண்டிய ஒருவர் கைது

அநுராதபுரம், மதவாச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வஹமல்கொல்லேவ பகுதியில் புதையல் தோண்டிய ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (21) கைது செய்யப்பட்டுள்ளார்.
மதவாச்சி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர், வஹமல்கொல்லேவ பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடையவராவார்.
சந்தேக நபரிடம் இருந்து புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட பேக்ஹோ இயந்திரம், உபகரணங்கள் மற்றும் பூஜை பொருட்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.