யாழில் 20 போதை அடிமைகளை புனர்வாழ்வுக்கு அனுப்ப நடவடிக்கை!!
போதைப் பொருள்களுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் போலீசார் மேற்கொண்டு விசேட நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டு 20 இளைஞர்களை புனர்வாழ்வு மையத்துக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தினை யாழ் மாவட்ட சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்
யாழில் போதைக்கு எதிராக கடந்த சில நாட்களாக போலீசாரால் முன்னெடுக்கப்படுகின்ற விசேட நடவடிக்கைகளின் போது போதை பொருட்களை கடத்தியமை உடைமையில் வைத்திருந்தமை போன்ற குற்றச்சாட்டில் 100க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் 27 பேரும் , ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 04 பேரும் , கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் 30 பேரும் போதை மாத்திரைகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 27 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களின் 20 பேர் போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்கள் என விசாரணைகளின் போது கண்டுபிடித்துள்ளோம்.
எனவே இவர்களை நீதிமன்றத்தின் ஊடாக போதைப் பொருள் புனர் வாழ்வு மையத்திற்கு அனுப்ப எடுத்துள்ளோம் என தெரிவித்தார்.