தேசிய அடையாள அட்டை இலக்கத்தை TIN நம்பராக எளிமைப்படுத்த நடவடிக்கை!
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வரி செலுத்துவோர் அடையாள எண்ணை (TIN) எளிமைப்படுத்த நிதி அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தனிநபர் ஒருவரின் தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கத்தை குறிப்பிட்ட நபரின் வரி
செலுத்துவோர் அடையாள இலக்கமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இந்த மாத தொடக்கத்தில், 2024 பெப்ரவரி 01 ஆம் திகதி முதல் வரி அடையாள இலக்கத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆயத்தங்கள் நடைபெற்று வருவதாக இராஜாங்க அமைச்சர் அறிவித்தார்.
வரி அடையாள எண் TIN ஒருவரை வருமான வரி செலுத்த வேண்டியவர் என்ற கட்டாயத்திற்கு பொறுப்பாக்காது
என்று அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் , மேலும் வருமானம் ஆண்டு வரி விலக்கு வரம்பான 1.2 மில்லியன், விட அதிகமாக இருந்தால் மட்டுமே வரி செலுத்தும் கடமை உள்ளது .
பிப்ரவரி 01 முதல் வாங்கி நடப்புக் கணக்கைத் திறக்கும்போது, கட்டிடத் திட்ட அனுமதி கோரும்போது, மோட்டார் வாகனத்தைப் பதிவுசெய்யும்போது, உரிமத்தைப் புதுப்பிக்கும்போது, நிலத்தின் உரிமையைப் பதிவுசெய்யும்போது TINஐச் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் என்று அரசாங்கம் மேலும் தெரிவிக்கிறது.